அமெரிக்காவை விட்டு வெளியேறுகிறாரா ஏஞ்சலினா ஜோலி?

ஏஞ்சலினா ஜோலி குழந்தைகளுடன் வெளிநாட்டிற்கு இடம்பெயர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ்,
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி அமெரிக்காவில் உள்ள தனது வீட்டை விற்றுவிட்டு குழந்தைகளுடன் வெளிநாட்டிற்கு இடம்பெயர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏஞ்சலினா ஜோலியின் இளைய குழந்தைகளான இரட்டையர்கள் நாக்ஸ் மற்றும் விவியன் அடுத்த ஆண்டு 18 வயதை எட்டியவுடன் இடம்பெயரக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஏஞ்சலினா ஜோலி கடந்த 2014-ல் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 குழந்தைககள் உள்ளனர்.
இதற்கிடையில், ஏஞ்சலினா ஜோலியும், பிராட் பிட்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2016-ல் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். சுமார் 8 வருடங்களாக இது தொடர்பான விசாரணை நீடித்தநிலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
Related Tags :
Next Story






