"அங்கீகாரம்" படத்தின் டிரெய்லர் அப்டேட்

அறம், அயலான் போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார்.
"அங்கீகாரம்" படத்தின் டிரெய்லர் அப்டேட்
Published on

சென்னை,

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஜே.பி. தென்பாதியான் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் அங்கீகாரம். இவர் இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். தடகள விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைச் சவால்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை மையமாகக் கொண்டு, உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இதில் அறம், அயலான் போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். மேலும் சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், அஜித் கோஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்தின் டிரெய்லர் நாளை காலை 11.03 மணியளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com