கவர்ச்சி காட்ட சொன்னதால் கொதிப்பு: டைரக்டர்கள் மீது ரிச்சா சத்தா புகார்

கவர்ச்சி காட்ட சொன்னதாக, டைரக்டர்கள் மீது ரிச்சா சத்தா புகார் தெரிவித்துள்ளார்.
கவர்ச்சி காட்ட சொன்னதால் கொதிப்பு: டைரக்டர்கள் மீது ரிச்சா சத்தா புகார்
Published on

மலையாள படங்களில் கவர்ச்சியாக நடித்து கலக்கிய ஷகிலாவின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இதில் ஷகிலா வேடத்தில் நடிப்பவர் ரிச்சா சத்தா. நடிகைகள் மீ டூவில் பாலியல் புகார்கள் சொல்லி வரும் நிலையில் ரிச்சா சத்தாவும் தனக்கு ஏற்பட்ட தொல்லைகளை வெளியிட்டுள்ளார். மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் இதுகுறித்து அவர் பேசியதாவது:-

பெண்களுக்கு எல்லா இடங்களிலும் பாலியல் தொல்லைகள் உள்ளன. இந்தி திரையுலகமும் இதற்கு விதி விலக்கு அல்ல. செக்ஸ் தொந்தரவுகளை பெண்கள் இப்போது துணிச்சலாக பேச ஆரம்பித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அதனால் அவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் பெரிய பிரச்சினையாக உள்ளது.

நானா படேகர் மீது பாலியல் புகார் சொன்ன தனுஸ்ரீதத்தாவின் நிலைமையை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. பாலியல் தொல்லைக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரியின் நடத்தையை கொச்சைப்படுத்துகிறார்கள். ஆனால் பாலியல் பலாத்காரம் செய்தவரை கொண்டாடுகிறார்கள்.

இதனால்தான் பல பெண்கள் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது புகார் அளிக்க தயங்குகிறார்கள். படப்பிடிப்பில் நானும் தொல்லையை சந்தித்தேன். நான் தொப்புளுக்கு மேல் வரை பேண்ட் அணிந்து இருந்தேன். தொப்புளுக்கு கீழே பேண்ட்டை இறக்கும்படி கூறினர். பேண்ட் அணிந்து தொப்புள்களை எப்படி காட்ட முடியும். நான் அதிர்ச்சியானேன். சில இயக்குனர்களுக்கு படம் இயக்குவதில் ஆர்வம் இல்லை. பெண்களின் சதையை மட்டும் பார்க்கிறார்கள். என்று ரிச்சா சத்தா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com