அஜித் மகளாக நடித்தவர் கதாநாயகி ஆன மகிழ்ச்சியில் அனிகா

அஜித்குமாரின் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் தற்போது ‘புட்ட பொம்மா' என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாகி உள்ளார்.
அஜித் மகளாக நடித்தவர் கதாநாயகி ஆன மகிழ்ச்சியில் அனிகா
Published on

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக வந்த அனிகா சுரேந்திரன் விஸ்வாசம், என்னை அறிந்தால் படங்களில் அஜித்குமாரின் மகளாக நடித்தார். தற்போது 'புட்ட பொம்மா' என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாகி உள்ளார்.

இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் அனிகா சுரேந்திரன் அளித்துள்ள பேட்டியில், "குழந்தை நட்சத்திரமாக எல்லோரின் மனதில் இடம்பிடித்தேன். இப்போது இன்னொரு சிறப்பு அம்சமாக கதாநாயகி ஆகி இருக்கிறேன்.

'புட்டபொம்மா' மலையாளத்தில் வெளியான 'கப்பெலா' படத்தின் தெலுங்கு ரீமேக், ஆரம்பத்தில் தெலுங்கில் வசனம் பேச கஷ்டப்பட்டேன். படக்ககுழுவினர் ஒவ்வொரு வார்த்தையாக சொல்லி கொடுத்து உதவினர்.

நடிப்பு என்றால் எனக்கு மிகவும் இஷ்டம். சிறுவயதிலிருந்தே மம்முட்டி, அஜித், நயன்தாரா, மம்தா மோகன்தாஸ் போன்ற முன்னணி நடிகர்-நடிகைகளோடு பணியாற்றியதால் அவர்களிடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

அவர்கள் எல்லாம் உயர்ந்த நிலைக்கு சென்ற போதிலும் கூட தங்கள் திறமையை நிரூபித்துக் கொள்ள ஒவ்வொரு கணமும் உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். தியேட்டரை போல் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் படங்களுக்கும் வரவேற்பு இருக்கிறது. எனக்கு உணர்வுப்பூர்வமான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. அதுபோன்ற கதாபாத்திரங்களில் ஒன்றிபோய் நடிப்பேன்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com