தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி ஓடும் வீடியோவை வெளியிட்டு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்!

அவர் “நாம் நிமிர்த்த தலையுடன் முன்னேறுகிறோம்! ஜெய் ஹிந்த்” என்று பதிவிட்டுள்ளார்.
தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி ஓடும் வீடியோவை வெளியிட்டு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்!
Published on

புதுடெல்லி,

இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக, இந்தி நடிகர் அனில் கபூர் தேசியக் கொடியுடன் ஓடும் வீடியோ வைரலாகி உள்ளது.

இது தொடர்பாக அவர் தேசியக் கொடியுடன் இருக்கும் வீடியோ படங்களை சமூக வலைதளமான டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் "நாம் நிமிர்த்த தலையுடன் முன்னேறுகிறோம்! ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில், 65 வயதான நடிகர் அனில் கபூர், தேசியக் கொடியை கையில் பிடித்தபடி ஓடுவதைக் காண முடிந்தது.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 'ஜக் ஜக் ஜீயோ' படம் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com