`உடம்புக்கு நல்லது இல்லைனு சொல்லியும் அனிருத் கேட்கல!' - ரவி ராகவன் பேட்டி

அனிருத்தின் இசைப் பணிகள் குறித்தும், அவரது வித்தியாசமான வேலை செய்யும் முறை குறித்தும் தந்தை ரவி ராகவன் பேசியுள்ளார்.
`உடம்புக்கு நல்லது இல்லைனு சொல்லியும் அனிருத் கேட்கல!' - ரவி ராகவன் பேட்டி
Published on: 

சென்னை,

“உலகமே தூங்கும்போது அனிருத் விழித்திருந்து வேலை செய்வார். மற்றவர்கள் வேலை செய்யும் நேரத்தில் அவர் தூங்குவார். நீண்ட நாட்களாக இப்படி வேலை செய்வது உடல்நலத்துக்கு நல்லதல்ல” என்று அனிருத்தின் தந்தையும் நடிகருமான ரவி ராகவன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

இரவு நேரத்தில் இசையமைக்கும் அனிருத்

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் அனிருத் ரவிச்சந்தர். தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழித் திரைப்படங்களுக்கும் இசையமைத்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறார். முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் இவர், தற்போது ‘கிங்’, ‘ராக்கா’, ‘அரசன்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றி வருகிறார். இவர் இசையமைத்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் 15-ந்தேதி வெளியாக உள்ளது.

தனது தனித்துவமான இசையால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் அனிருத், இரவு நேரங்களில் விழித்திருந்து இசையமைக்கும் பழக்கத்தைக் கொண்டவர்.

அனிருத்தின் வித்தியாசமான வேலை செய்யும் முறை

இதுகுறித்து அனிருத்தின் தந்தையும் நடிகருமான ரவி ராகவன் பேட்டி ஒன்றில் கூறியதாவது: “உலகமே தூங்கும்போது அனிருத் விழித்திருந்து வேலை செய்வார். மற்றவர்கள் வேலை செய்யும் நேரத்தில் அவர் தூங்குவார். நீண்ட நாட்களாக இப்படி வேலை செய்வது உடல்நலத்துக்கு நல்லதல்ல என்றாலும், அவருடைய இந்த வித்தியாசமான வேலை செய்யும் முறையில்தான் சிறந்த இசை உருவாகிறது. அப்படி இருக்கும்போது, ஒரு தந்தையாக அவரிடம் கேள்வி கேட்க முடியவில்லை. அவருடைய படைப்பாற்றல் சாதாரண மனிதர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சார்கூட இரவில் பணிபுரியும் இந்தப் பழக்கம் குறித்து கூறியிருக்கிறார்.

இரவு நேரத்தில் நிலவும் அமைதியான சூழல், அவர்களது படைப்பாற்றலுக்குத் தேவையானதாக இருக்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்கு என்ன தேவையோ, அதை உணர்ந்து அமைதியாக இருக்க வேண்டியுள்ளது. அதனால்தான் நானும் அவரிடம் கேள்வி கேட்காமல் அமைதியாக இருந்து அவருடைய பணியை ரசிக்கிறேன்” என்றார்.

அனிருத்தின் இசைப் பணிகள் குறித்தும், அவரது வித்தியாசமான வேலை செய்யும் முறை குறித்தும் தந்தை ரவி ராகவன் பகிர்ந்துள்ள இந்தத் தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com