திருமணம் குறித்து பரவிய வதந்தி - அனிருத் விளக்கம்


திருமணம் குறித்து பரவிய வதந்தி - அனிருத் விளக்கம்
x
தினத்தந்தி 14 Jun 2025 8:49 PM IST (Updated: 16 Aug 2025 9:08 AM IST)
t-max-icont-min-icon

தனது திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சென்னை,

தனுஷ் நடித்த '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் உருவான பாடல்களையும் பாடியுள்ளார். இப்போது அவர் கூலி, மதராஸி, ஜனநாயகன், ஜெயிலர் 2 என பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இவரின் திருமணம் தொடர்பான தகவல் வெளியாகி வருகின்றன. அதாவது, ஐபிஎல் கிரிகெட் தொடரில் உள்ள ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவியா மாறனை அனிருத் திருமணம் செய்யவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் தீயாக பரவியது.

இந்த நிலையில் தனது திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். "கல்யாணமா.. எனக்கா? கொஞ்சம் அமைதியா இருங்க நண்பர்களே தயவுசெய்து வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story