திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்த அனிருத்


Anirudh had darshan of Lord Shiva at the Tiruvannamalai temple
x
தினத்தந்தி 19 Jan 2025 9:27 AM IST (Updated: 14 Jun 2025 8:47 PM IST)
t-max-icont-min-icon

அனிருத் தற்போது இசையமைத்திருக்கும் படம் விடாமுயற்சி

திருவண்ணாமலை,

தனுஷ் நடித்த '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் உருவான பாடல்களையும் பாடியுள்ளார். தற்போது இவர் இசையமைத்திருக்கும் படம் விடாமுயற்சி. அஜித் நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாக உள்ளது.

மேலும், இப்படத்தின் 2-வது பாடல் இன்று வெளியாக உள்ளநிலையில், இசையமைப்பளர் அனிருத், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். அப்போது அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

1 More update

Next Story