அனிருத் என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு- இயக்குனர் விக்னேஷ் சிவன் உருக்கம்!

"லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன், அனிருத் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
அனிருத் என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு- இயக்குனர் விக்னேஷ் சிவன் உருக்கம்!
Published on

சென்னை,

‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதனை தொடர்ந்து, ‘நானும் ரவுடிதான்’ , ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ போன்ற படங்களை இயக்கிய பிரபலமானார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, சீமான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 10ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இந்தப் படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அதாவது, 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்புக்காக வெறும் ரூ.250 எடுத்துக் கொண்டு பாண்டிச்சேரிக்கு சென்றேன். அப்போது நான் அனிருத்திடம் மட்டும் சொல்லி விட்டு கிளம்பினேன். ஆனால் நான் பேருந்தில் செல்லும்போது, “உங்களுடைய பைக்குள் ரூ.50,000 பணம் வைத்துள்ளேன்” என அனிருத் மெசேஜ் செய்தார். அன்று நான் அழுததில் பேருந்தின் ஜன்னல் கம்பிகள் கண்ணீரால் நனைந்தன. அந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. அனிருத் என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு என்று உருக்கமாக பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com