நடிகர் நானியின் 33-வது படத்துக்கு இசையமைக்கும் அனிருத்

தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா நானியின் 33-வது படத்தை இயக்குகிறார்.
நடிகர் நானியின் 33-வது படத்துக்கு இசையமைக்கும் அனிருத்
Published on

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது நடிப்பில் வெளிவந்த 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா' திரைப்படங்கள் அமோக வெற்றியைப் பெற்றன. அதன் பின்னர் வெளியான 'தசரா' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதனை தொடர்ந்து நானியின் 30வது படமாக 'ஹாய் நான்னா' படம் கடந்தாண்டு வெளியானது. இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடித்திருந்தார். 31வது படமாக அடடே சுந்தரா படத்தின் இயக்குநருடன் நானி இணைந்துள்ளார். டிவிவி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் 'சரிபோத சனிவாரம்' (சூர்யாவின் சனிக்கிழமை) எனப் பெயரிடப்பட்டுள்ள படம் ஆகஸ்ட் 29ம் தேதி வெளியானது. இப்படத்தில் இவருடன் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 'சூர்யாவின் சனிக்கிழமை' ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்திருந்தது.தற்போது இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் 'ஹிட் 3' படத்தில் நடித்து வருகிறார்.

நானியின் முந்தைய படங்களான 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா', 'தசரா', 'ஹாய் நான்னா', 'சூர்யாவின் சனிக்கிழமை' படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன.

நானியின் 33-வது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா நானியின் 33-வது படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்குத் தற்காலிகமாக 'நானிஒடேலா - 2' எனப் பெயரிட்டுள்ளனர். படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நானி நடித்த ஜெர்சி படத்திற்கும் அனிருத்தே இசையமைத்திருந்தார். தற்போது, இக்கூட்டணி மீண்டும் இணைகிறது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com