ரியோ ராஜின் “ராம் இன் லீலா” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியிட்ட அனிருத்

ராம்சந்திரன் கண்ணன் இயக்கும் ‘ராம் இன் லீலா’ படத்தில் ரியோ ராஜ், வர்திகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ரியோ ராஜின் “ராம் இன் லீலா” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியிட்ட அனிருத்
Published on

'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரியோ ராஜ், தொடர்ந்து 'பிளான் பண்ணி பண்ணனும்', 'ஜோ', 'ஸ்வீட் ஹார்ட்', 'ஆண்பாவம் பொல்லாதது' உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

காதல் கதையுடன் வரும் ரியோ ராஜ்

தற்போது அவர், 'ராம் இன் லீலா' என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் வர்திகா கதாநாயகியாக நடித்துள்ளார். காதலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்திற்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார்.

முதல் பாடல் வெளியானது

சமீபத்தில் 'ராம் இன் லீலா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ‘ராம் இன் லீலா’ படத்தின் ‘யார் யாரிவள்’ பாடலை அனிருத் வெளியிட்டுள்ளார். இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com