ஷாருக்கானின் “கிங்” படத்தில் இருந்து அனிருத் விலகல்

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடித்துள்ள ‘கிங்’ படம், வரும் டிசம்பர் 24-ந் தேதி வெளியாக உள்ளது.
ஷாருக்கானின் “கிங்” படத்தில் இருந்து அனிருத் விலகல்
Published on: 

ஷாருக்கானின் ‘கிங்’படத்தில் இருந்து இசையமைப்​பாளர் அனிருத் விலகியுள்ளார்.

ஷாருக்​கான் நடித்​துள்ள திரைப்​படம் ‘கிங்’. இதை சித்​தார்த் ஆனந்த் இயக்​கி​யுள்​ளார். ‘பதான்’ படத்​தின் சூப்​பர் ஹிட் வெற்​றியைத் தொடர்ந்து இரு​வரும் மீண்​டும் இணைந்​துள்​ளனர். இதில் அனில் கபூர், ராணி முகர்ஜி, தீபிகா படுகோன், சுஹானா கான், அபிஷேக் பச்​சன் உள்​பட பலர் நடித்​துள்​ளனர். கரீனா கபூர் சிறப்​புத் தோற்​றத்​தில் நடித்​துள்​ளார்.

‘கொலை​யாளி அல்ல; நான் காதலன்!’ என்ற வாசகத்​துடன் வெளியான இப்​படத்​தின் போஸ்​டர் சமீபத்​தில் வெளியாகி வரவேற்​பைப் பெற்​றது.

பிரம்​மாண்​ட​மான பட்​ஜெட்​டில் ஆக் ஷன் த்​ரில்​லராக உரு​வாகி​யுள்ள இந்​தப்​படத்தை ரெட் சில்​லீஸ் என்​டர்​டெய்ன்​மென்ட் மற்​றும் மார்ஃபிளிக்ஸ் பிக்​சர்ஸ் சார்​பில் கவுரி கான், சித்​தார்த் ஆனந்த் மற்​றும் மம்தா ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரித்​துள்​ளனர்.

கிறிஸ்துமஸ் வெளியீடு

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே மீண்டும் இணைந்துள்ள இப்படம், வரும் டிசம்பர் 24-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

‘கிங்’ ​படத்​துக்கு அனிருத் மற்​றும் சச்​சின் - ஜிகர் இணைந்து இசையமைப்​ப​தாக அறி​விக்​கப்​பட்டு இருந்​தது.

ரூ.175 கோடிக்கு வாங்கிய பிரபல நிறுவனம்

ஷாருக்கானின் ‘கிங்’ படத்தின் வெளிநாட்டு திரையரங்க விநியோக உரிமத்தை பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இத்திரைப்படத்தின் வெளிநாட்டு திரையரங்க விநியோக உரிமம் ரூ.175 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரு​மணம் காரண​மாக விலகல்

இந்​நிலை​யில், திரு​மணம் காரண​மாக ‘கிங்’ ​படத்​தில் இருந்து அனிருத் வில​கி​யுள்​ளார். இரு தரப்​பினரும் பேசி, சுமுக​மாகப் பிரிந்து கொள்ள முடிவெடுத்​த​தாகக் கூறப்​படு​கிறது. இப்​படத்​துக்​காக அவர் ஏற்​கெனவே அமைத்​திருந்த தீம் மியூசிக்கை, ஷாருக்​கானுக்கு பரிசாக வழங்​கி​யுள்​ளார். இதையடுத்து சச்​சின் - ஜிகர் இப்​படத்​தின் இசைக்​குப் பொறுப்​பேற்​றுள்​ளார்.

X