அனிருத்தின் “அரவிந்த்” ஆல்பம் டீசர் வெளியீடு

இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த புதிய ஆல்பத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
அனிருத்தின் “அரவிந்த்” ஆல்பம் டீசர் வெளியீடு
Published on

தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இசையமைத்து, பான் இந்திய இசை அமைப்பாளராக அனிருத் உயர்ந்திருக்கிறார். இவர் ரசிகர்களின் விருப்பத்திற்காக வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு மேடை இசைநிகழ்ச்சியை ரசிகர்களின் பங்களிப்புடன் நேரலையாக நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இசையமைப்பாளர் அனிருத் 15 ஆண்டுகளாகத் திரைத்துறையில் இருக்கிறார். நூற்றுக்கணக்கான ஹிட் பாடல்களைக் கொடுத்ததுடன் பின்னணி இசைக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அபாரமான பின்னணி இசைகளையும் உருவாக்கி வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்திற்கான அறிவிப்பு வீடியோ பின்னணி இசை, அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் படத்தின் அறிவிப்பு இசை, டிசி படத்தின் ரிவெஞ்ச் ஆகியவை லட்சகணக்கான முறை ரீல்ஸ் விடியோக்களில் பயன்படுத்தப்பட்டு டிரெண்டிங்கில் இடம்பிடித்தன.

தற்போது, அரவிந்த் என்கிற ஆல்பத்தை அனிருத் உருவாக்கியுள்ளார். இதன் டீசரை இன்று வெளியிட்டு, “நாளை (ஜூன் 14) மாலை அரவிந்த்தைச் சந்திக்கலாம்” என தெரிவித்துள்ளார். திரைப்படங்கள், இசைக் கச்சேரிகளுக்கு இடையே ஆல்பம்களிலும் அனிருத் கவனம் செலுத்தி வருவது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com