அஞ்சலி , சித்தி இத்னானி நடிக்கும் “ட்ரோன்ஸ்” படத்தின் ராப் பாடல் வெளியானது

அஞ்சலி , சித்தி இத்னானி நடிக்கும் ‘ட்ரோன்ஸ்’ படம் வருகிற அக்டோபர் 16ந் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
அஞ்சலி , சித்தி இத்னானி நடிக்கும் “ட்ரோன்ஸ்” படத்தின் ராப் பாடல் வெளியானது
Published on: 

சித்தி இத்னானி, தேவதர்ஷினி, அஞ்சலி நாயர் ஆகிய மூவரும் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ‘ட்ரோன்ஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘டெரர் எரர்’ எனும் இரண்டாவது பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.

ஹாரர், பேண்டஸி கதையில் படம்

கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாக வைத்து ‘ட்ரோன்ஸ்’ படத்தின் கதை உருவாகியுள்ளது. ஹாரர், பேண்டஸி மற்றும் சயின்ஸ் பிக்ஷன் அம்சங்கள் கலந்த வித்தியாசமான திரைக்கதையில், மேட் சயின்டிஸ்ட், டிடெக்டிவ், ஏஞ்சல், சூனியக்காரி உள்ளிட்ட புதிரான கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. ஆர். ராகவ் மிர்தாத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கொமடி வித் பேண்டஸி ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி எம் மார்கன் பிலிம்ஸ் சார்பில் ஜி.எம். மார்கன் தயாரித்திருக்கிறார்.

நட்சத்திர பட்டாளம்

இப்படத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆர்ஜே தீபக் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய, ஹரி எஸ்.ஆர். இசையமைக்கிறார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பையும், ஆர். கிஷோர் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.

ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘ட்ரோன்ஸ்’ படம் வருகிற அக்டோபர் 16ந் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. வித்தியசமான கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்தபடத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

இந்த நிலையில், அஞ்சலி, சித்தி இத்னானி நடிக்கும் ‘ட்ரோன்ஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘டெரர் எரர்’ எனும் இரண்டாவது பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘பறக்க விடுவேன் எலும்புக்கூட.. மொறச்சி காட்டாத மதர் போர்டா..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை இசையமைப்பாளரும், பாடகருமான எஸ். ஆர். ஹரி, இயக்கி பெர்ரி, எழுதி கானா கௌதம், ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள். ராப் இசை பாணியில் உருவாகி இருக்கும் இந்த பாடலில் இடம் பிடித்திருக்கும் தங்கிலீஷ் வார்த்தைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com