திரைக்கு வரும் அஞ்சலியின் பேய் படம்

நடிகை அஞ்சலி நடித்துள்ள பேய் படம் திரைக்கு வர இருக்கிறது.
திரைக்கு வரும் அஞ்சலியின் பேய் படம்
Published on

கதாநாயகிகள் பேயாக நடிக்கும் படங்கள் அதிகம் வருகின்றன. நயன்தாரா மாயா, ஐரா படங்களில் பேயாக நடித்து இருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. திரிஷா மோகினி, அரண்மனை-2 படங்களில் பேயாக மிரட்டினார். ஆண்ட்ரியா மாளிகை என்ற படத்தில் பேயாக நடித்து வருகிறார்.

இப்போது அஞ்சலியும் லிசா படத்தில் பேயாக நடித்துள்ளார். கற்றது தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அஞ்சலி, அங்காடி தெரு படத்தில் பிரபலமாகி தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். ஆனால் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களால் சில ஆண்டுகளாக தமிழ் படங்களில் கவனம் செலுத்தாமல் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

ஆனால் சமீப காலமாக மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். தற்போது லிசா என்ற பேய் படத்திலும் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ராஜு விஸ்வநாத் இயக்கி உள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படத்தை எடுத்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. இந்த படம் அடுத்த மாதம் (மே) திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்து உள்ளது. லிசா படத்தில் அஞ்சலி பேய் வேடத்தில் நடிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com