அஞ்சலி நடிக்கும் “ட்ரோன்ஸ்” படத்தின் டிரெய்லர் வெளியானது

அஞ்சலி , சித்தி இத்னானி நடிக்கும் ‘ட்ரோன்ஸ்’ படம் வருகிற அக்டோபர் 16ந் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
அஞ்சலி நடிக்கும் “ட்ரோன்ஸ்” படத்தின் டிரெய்லர் வெளியானது
Published on: 

அஞ்சலி, சித்தி இத்னானி நடிக்கும் ‘ட்ரோன்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியானது.

ஹாரர், பேண்டஸி கதையில் படம்

கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாக வைத்து ‘ட்ரோன்ஸ்’ படத்தின் கதை உருவாகியுள்ளது. ஹாரர், பேண்டஸி மற்றும் சயின்ஸ் பிக்ஷன் அம்சங்கள் கலந்த வித்தியாசமான திரைக்கதையில், மேட் சயின்டிஸ்ட், டிடெக்டிவ், ஏஞ்சல், சூனியக்காரி உள்ளிட்ட புதிரான கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன.

நட்சத்திர பட்டாளம்

இப்படத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆர்ஜே தீபக் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய, ஹரி எஸ்.ஆர். இசையமைக்கிறார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பையும், ஆர். கிஷோர் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.

ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘ட்ரோன்ஸ்’ படம் வருகிற அக்டோபர் 16ந் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. வித்தியசமான கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்தபடத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

படத்தின் டிரெய்லர் வெளியீடு

இந்த நிலையில், அஞ்சலி, சித்தி இத்னானி நடிக்கும் ‘ட்ரோன்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியானது.

X

Daily Thanthi
www.dailythanthi.com