

மும்பை,
பவித்ர ரிஷ்தா என்ற இந்தி சீரியலில் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜோடியாக நடித்து பிரபலமானவர் அங்கிதா லோகண்டே. மேலும், சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 17 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூன்றாவது ரன்னர் அப்பாக வந்தார். இவர் தொழில் அதிபர் விக்கி ஜெயினை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் அங்கிதா லோகண்டே தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் உணவகத்திற்கு சென்றிருந்தார். அங்கு அவர் ஆங்கில பாடல் ஒன்றிற்கு உற்சாகமாக நடனமாடினார்.
இந்த வீடியோவை அங்கிதா லோகண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் நடிகையின் மனநலம் குறித்து கேள்வி எழுப்பி விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், நடிகை அங்கிதா லோகண்டே விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆம், எனக்கு நடனமாடுவது பிடிக்கும். ஆம், நான் எப்போதும் உண்மையாக இருப்பேன். ஆம், என்னுள் இன்னும் குழந்தைத்தனம் இருக்கிறது. உங்களுக்கு நன்றி. இவ்வாறு தெரிவித்துள்ளார்.