ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸாகும் “அண்ணாமலை”

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘அண்ணாமலை’ படத்தில் குஷ்பு, சரத்பாபு, மனோரமா, ராதாரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸாகும் “அண்ணாமலை”
Published on: 

ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘அண்ணாமலை’ திரைப்படத்தை நவீன தொழில் நுட்பத்தில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

முன்னணி நடிகர்களின் 'ஹிட்' திரைப்படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் கலாசாரம் பெருகி வருகிறது. அந்த படங்களும் வசூல் பார்த்து வருகின்றன.

அந்தவகையில் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படைப்பான ‘அண்ணாமலை’ திரைப்படம் ரீ-ரிலீசாகிறது. 1992-ம் ஆண்டில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘அண்ணாமலை’ படத்தில் குஷ்பு, சரத்பாபு, மனோரமா, ராதாரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தேவா இசையில் பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்தன. படத்தின் வசனங்களும் பெரியளவில் பேசப்பட்டன.

இதற்கிடையே, ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு (டிசம்பர் 12) ‘அண்ணாமலை’ திரைப்படத்தை நவீன தொழில் நுட்பத்தில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. 4-கே தரத்தில் காட்சிகள் மேம்படுத்தப்பட்டு, டால்பி அட்மாஸ் ஒலி தொழில்நுட்பத்துடன் இப்படம் மீண்டும் வெளியாக இருக்கிறது. இது ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்ட செய்தியாக அமைந்திருக்கிறது. ‘அண்ணாமலை’ திரைப்படம் கடந்தாண்டு ரஜினியின் பிறந்த நாளுக்கு சில திரைகளில் ரீ-ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.

X