'அன்னபூரணி' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

நயன்தாரா நடித்துள்ள புதிய படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
'அன்னபூரணி' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார்.

சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'அன்னபூரணி' திரைப்படம் வரும் டிசம்பர் - 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com