சுந்தர்.சி நடித்துள்ள 'ஒன் 2 ஒன்' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு

கே.திருஞானம் இயக்கத்தில் சுந்தர்.சி நடித்துள்ள திரைப்படம் 'ஒன் 2 ஒன்'.
சுந்தர்.சி நடித்துள்ள 'ஒன் 2 ஒன்' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு
Published on

சென்னை,

இயக்குனர் கே.திருஞானம் இயக்கத்தில் சுந்தர்.சி நாயகனாகவும், அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடித்துள்ள திரைப்படம் 'ஒன் 2 ஒன்'. இந்த படத்தில் விஜய் வர்மன், நீது சந்திரா, ராகினி திவிவேதி, மானஸ்வி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

24 HRS புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். எஸ். கே.ஏ. பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சி.எஸ். பிரேம் குமார் படத்தொகுப்பு செய்கிறார். படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'ஒன் 2 ஒன்' படத்தின் டிரைலர் நாளை (ஜூன் 29) வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com