“ஜனநாயகன்” விநியோகஸ்தர் வெளியிட்ட அறிவிப்பு.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

சென்சார் பிரச்னையில் சிக்கியுள்ள விஜய்யின் ‘ஜனநாயகன்’ , ஏப்ரல் 30ம் தேதி வரை ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என கனடா விநியோகஸ்தர் யார்க் சினிமாஸ் அறிவித்துள்ளது.
“ஜனநாயகன்” விநியோகஸ்தர் வெளியிட்ட அறிவிப்பு.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்
Published on

நடிகர் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வெளியாவதாக இருந்தது. அதாவது, கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல், மறுஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ், சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத் தீர்ப்பும் சாதகமாக கிடைக்காததால், ‘ஜனநாயகன்’ பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்த படத் தயாரிப்பு நிறுவனம், படத்திற்கு சென்சார் சான்று கோரி ரிவைசிங் கமிட்டியிடம் அனுப்பியுள்ளது.

சென்சார் போர்டு பரிந்துரைத்த சில மாற்றங்களை செய்ய படக்குழு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக, படத்தில் உள்ள சில சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட உள்ளதாகவும், படத்தின் மொத்த நீளம் சுமார் 20 நிமிடங்கள் வரை குறையக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்சார் பிரச்னையில் சிக்கியுள்ள நடிகர் விஜய்யின் ஜனநாயகன், ஏப்ரல் 30ம் தேதி வரை ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என கனடா விநியோகஸ்தர் யார்க் சினிமாஸ் அறிவித்துள்ளது.

முன்பதிவு செய்த அனைவரும் டிக்கெட்டுக்கான தொகையை திரும்ப பெற்று கொள்ளுமாறு யார்க் சினிமாஸ் தெரிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com