'மதராஸி' படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வீடியோவின் அறிவிப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'மதராஸி' திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது.
'மதராஸி' படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வீடியோவின் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான 'மதராஸி' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மதராஸி படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படக்குழு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கூலி படத்தின் இடைவேளையின் போது சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com