'லியோ' படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு..!

'லியோ' படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
'லியோ' படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு..!
Published on

சென்னை,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'லியோ' திரைப்படம் வருகிற 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் 'லியோ' படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்த படத்தின் மூன்றாவது பாடலான 'அன்பெனும்' பாடல் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த பாடல் வெளியாகும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'அன்பெனும்' பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com