கதாநாயகனான இன்னொரு நடன இயக்குனர்

நடன இயக் குனரான ஜாய்மதி, ‘நற்பவி’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கதாநாயகனான இன்னொரு நடன இயக்குனர்
Published on

பிரபுதேவா, லாரன்ஸ், ஹரிகுமார், தினேஷ் ஆகிய நடன இயக்குனர்கள் வரிசையில் இன்னொரு நடன இயக் குனரான ஜாய்மதி, 'நற்பவி' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.இவர் நூறு படங்களுக்கு மேல் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து, குறும்படங்களில் நடித்தும், இயக்கியும் அனுபவம் பெற்றவராகவும் இருக்கிறார். 'நற்பவி' படத்தில் ஜாய்மதியுடன் ப்ரீத்தி, மதுமிதா, காவியா, சந்தானபாரதி, சம்பத்ராம், பாலசுப்ரமணியம், முனீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை எஸ்.ஜே.திவாகர் டைரக்டு செய்கிறார். விவசாயம் செய்யும் கதாநாயகன் சினிமாவில் நடிக்க முயற்சி செய்கிறார். கிராம வளர்ச்சியிலும் ஈடுபடுகிறார். அவர் மீது கொலைப் பழி விழுகிறது. அதில் இருந்து மீண்டாரா? என்பது கதை. ஒளிப் பதிவு-திருமூலம், இசை-தயாநந்த் பிறைசூடன்.

X

Daily Thanthi
www.dailythanthi.com