கேரளாவில் இருந்து இன்னொரு கதாநாயகி

தமிழ் திரையுலகுக்கு கேரளாவில் இருந்து ஏராளமான கதாநாயகிகள் அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களில் லலிதா, பத்மினி, ராகினி, கே.ஆர்.விஜயா, அம்பிகா, ராதா, நயன்தாரா ஆகியோர் முக்கியமானவர்கள்.
கேரளாவில் இருந்து இன்னொரு கதாநாயகி
Published on

தமிழ் திரையுலகுக்கு கேரளாவில் இருந்து ஏராளமான கதாநாயகிகள் அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களில் லலிதா, பத்மினி, ராகினி, கே.ஆர்.விஜயா, அம்பிகா, ராதா, நயன்தாரா ஆகியோர் முக்கியமானவர்கள். இந்த வரிசையில் புதிதாக இடம் பெற்று இருப்பவர், ரெஜிசா விஜயன். இவர், மாரிசெல்வராஜ் இயக்கி, தனுஷ் நடித்து விரைவில் திரைக்கு வரயிருக்கும் கர்ணன் படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

என் சொந்த ஊர், கேரள மாநிலம் கொச்சி. எம்.ஏ. படித்து இருக்கிறேன். பல மலையாள படங்களில் நடித்து இருக்கிறேன். தனுஷ் நடித்த அசுரன் படத்தில் அவருடைய நடிப்பை பார்த்து அசந்து போனேன். அவருக்கு ஜோடியாக இவ்வளவு சீக்கிரத்தில் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை.

வாலிப வயதில் எல்லா பெண்களுக்கும் வருவது போல் எனக்கும் காதல் வந்து இருக்கிறது. எனக்கு ஒரு பாய்ப்ரெண்ட் இருக்கிறார். அவர் யார்? என்பதை இப்போது சொல்ல மாட்டேன் என்கிறார், ரெஜிசா விஜயன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com