''அந்த படத்தில் நடித்தபோது அசவுகரியமாக உணர்ந்தேன்'' - நடிகை அனுபமா

அனுபமா, லில்லி வேடத்தில் நடித்தது குறித்து மனம் திறந்து பேசினார்.
சென்னை,
'தில்லு ஸ்கொயர்' படத்தில் லில்லி வேடத்தில் நடித்தது பற்றிய நடிகை அனுபமாவின் கருத்துகள் தற்போது வைரலாகி வருகின்றன. எப்போதும் பாரம்பரிய வேடங்களில் நடித்து வந்த இவர் இந்த படத்தில் கிளாமர், முத்த காட்சிகளில் நடித்து அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
இதன் காரணமாக, படம் வெளியான நேரத்தில் அனுபமா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், சமீபத்தில் தனது பரதா படத்தின் புரம்மோஷனில் பங்கேற்ற அனுபமா, லில்லி வேடத்தில் நடித்தது குறித்து மனம் திறந்தார். அத்தகைய கதாபாத்திரத்தில் நடித்தது தனக்கும் பிடிக்கவில்லை என்றும் சவுகரியமாக இல்லை என்றும் அனுபமா கூறினார்.
அவர் கூறுகையில், "'தில்லு ஸ்கொயர்' படத்தில் லில்லி வேடத்தில் நடித்தது என் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் மட்டுமல்ல, எனக்கும் பிடிக்கவில்லை. அந்த வேடத்தில் நடித்தது தவறில்லை, ஆனால் நான் நடித்திருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். படத்தில் நடிக்கும்போது ரசிகர்கள் என்ன நினைப்பார்கள் என்று பயந்தேன். எதிர்பார்த்தபடி விமர்சனங்களைப் பெற்றேன்'' என்றார்.






