'பேச வேண்டாம்' என்று கூச்சலிட்ட ரசிகர்கள்: சோகத்தில் திரும்பி சென்ற அனுபமா - வைரல் வீடியோ

ஐதராபாத்தில் 'டில்லு ஸ்க்வேயர்' படத்தின் வெற்றி விழாவை படக்குழு நடத்தினர்.
image courtecy:instagram@anupamaparameswaran96
image courtecy:instagram@anupamaparameswaran96
Published on

சென்னை,

தமிழில் 'கொடி', 'தள்ளிப்போகாதே', 'சைரன்' ஆகிய படங்களில் நடித்துள்ள பிரபல தெலுங்கு நடிகையான அனுபமா பரமேஸ்வரன் 'டில்லு ஸ்க்வேயர்' என்ற தெலுங்கு படத்தில் முத்தக்காட்சியில் நடித்ததை பலரும் அவதூறாக விமர்சித்தனர்.

இதனால் கோபமடைந்த அனுபமா, முத்தக்காட்சியில் நடிக்கமாட்டேன். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று நான் சொன்னது எனது 18 வயதில். ஆனால் இப்போது எனக்கு சினிமா பற்றிய முதிர்ச்சி வந்துள்ளது. கதைக்கு தேவையென்றால் அதுபோன்ற காட்சிகளில் நடிப்பது தவறு இல்லை. என்று தெரிவித்திருந்தார்.

ஆனாலும் விடாமல் தொடர்ந்து அனுபமாவை விமர்சித்து வந்தனர். இந்நிலையில், ஐதராபாத்தில் ஜூனியர் என்.டி.ஆரை அழைத்து படத்தின் வெற்றி விழாவை படக்குழு நடத்தினர். இந்த விழாவில் அனுபமாவும் கலந்துகொண்டார்.

அப்போது அனுபமா மேடைக்கு சென்று பேச ஆரம்பித்தார். ஆனால் ரசிகர்கள் அவரை பேச வேண்டாம் என்று கூச்சலிட்டனர். இதனால் அனுபமா, பேசலாமா? வேண்டாமா? என்று கேட்டார். அதற்கு ரசிகர்கள் வேண்டாம் என்று கூச்சல் போட்டனர். இதனால் வருத்தமடைந்த அனுபமா சரி போய் விடுகிறேன் என்று சொல்லி சிலருக்கு நன்றி கூறி விட்டு சோகத்தில் திரும்பி சென்றார். இது குறித்தான வீடியோ இணையத்தில் வைரலானது.

எதிர்ப்பையும் மீறி டில்லு ஸ்க்வேயர் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் செயல் கண்டிக்கத்தக்கது என்றும், ஒரு நடிகையை இப்படி அவமானப்படுத்துவது தவறு என்றும் சொல்லி பலரும் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com