'’வாழ்க்கையில் மறக்க முடியாத வலி அது... - நடிகை அனுபமா


Anupama parameswaran shares bad incident her life
x
தினத்தந்தி 22 Sept 2025 11:38 AM IST (Updated: 22 Sept 2025 11:38 AM IST)
t-max-icont-min-icon

தமிழில் ''கொடி'' படத்தின் மூலம் அறிமுகமாகமானவர் அனுபமா

சென்னை,

தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறைகளில் தனக்கென தனி முத்திரையைப் பதித்த நடிகை அனுபமா.

இவர் மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் காதல் படமான ''பிரேமம்'' மூலம் அறிமுகமானார். தமிழில் ''கொடி'' படத்தின் மூலம் அறிமுகமாகமான இவர், தற்போது துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ''பைசன்'' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 17-ம் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்தில் இவர் 'கிஷ்கிந்தாபுரி' என்ற ஹாரர் படத்தில் நடித்திருந்தார்.பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ் ஹீரோவாக நடித்த இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சூழலில், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அனுபமா தெரிவித்த கருத்துகள் தற்போது வைரலாகி வருகின்றன.

அவர் கூறுகையில், "நம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் எலோரிடமும் அன்பாக இருக்க வேண்டும். கோபத்தை மனதிற்குள்ளேயே வைத்திருந்தால், கடைசியில் சோகம்தான் மிஞ்சும்.

என் நெருங்கிய தோழி ஒருவர். நாங்கள் ரொம்ப நல்ல நண்பர்கள். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. நான் அவருடன் பேசுவதை நிறுத்து விடேன். ஆனால் அவர் என்னுடன் பேச முயற்சி பண்ணார். அவர் எனக்கு பல முறை மெசேஜ் பண்ணார். நான் மெசேஜ்களுக்கு ரிப்ளை பண்ணுவதை நிறுத்தி விட்டேன். அவரை அலட்சியப்படுத்தினேன்.

ஆனால் 2 நாட்களுக்கு முன்பு, அவர் இறந்துவிட்டதை தெரிந்துகொண்டேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அது என் வாழ்க்கையில மறக்க முடியாத வலி. சில சமயங்களில், நாம் நேசிப்பவர்களுடனான சண்டைகள் அல்லது தவறான புரிதல்கள் நம்மை வாழ்நாள் முழுவதும் வருத்தத்தில் ஆழ்த்தும்'' என்றார்.

1 More update

Next Story