2-வது முறையாக இணைந்த அனுபமா, ஷர்வானந்த்


Anupama-Sharwanand reunited
x
தினத்தந்தி 27 April 2025 4:24 PM IST (Updated: 27 April 2025 4:24 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் ஷர்வானந்தின் 38-வது படத்தில் அனுபமா இணைந்துள்ளார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா. இவர், சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான 'டிராகன்' படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிகாட்டி இருந்தார்.

தற்போது இவர் பிரவீன் கந்த்ரேகுலா இயக்கத்தில் 'பரதா' படத்திலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பைசன்' படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் ஷர்வானந்தின் 38-வது படத்தில் அனுபமா இணைந்துள்ளார்.

ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் கே.கே.ராதா மோகன் தயாரிக்கும் இப்படத்திற்கு பீம்ஸ் செரிரோலியோ இசையமைக்கிறார். சம்பத் நந்தியால் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனுபமாவும் ஷர்வானந்தும் இதற்கு முன்பு 'ஷதமானம் பவதி' என்ற படத்தில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டரானது. தற்போது இவர்கள் 2-வது முறையாக இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

1 More update

Next Story