அனுபமாவின் “லாக் டவுன்” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஏஆர் ஜீவா இயக்கத்தில் அனுபமா நடித்த ‘லாக் டவுன்’ படம் வருகின்ற 12ம் தேதி வெளியாகிறது.
அனுபமாவின் “லாக் டவுன்” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள லாக் டவுன் திரைப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஏஆர் ஜீவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு என்ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர், பாடல்கள் ஆகியவை சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 

இந்த நிலையில், லாக் டவுன் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 12ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாக இருந்த நிலையில், கனமழை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com