அனுராக் காஷ்யப் பிறந்த நாளையொட்டி புதிய படத்தின் போஸ்டர் வெளியீடு

ரைபிள் கிளப் எனப் பெயரிடப்பட்டுள்ள மலையாள படத்தின் போஸ்டர் அனுராக் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.
அனுராக் காஷ்யப் பிறந்த நாளையொட்டி புதிய படத்தின் போஸ்டர் வெளியீடு
Published on

மும்பை,

இந்தி திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். இவர் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் லக் பை சான்ஸ், பூத் நாத் ரிட்டர்ன் போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார்.

அனுராக் காஷ்யப் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான 'லியோ' படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மகாராஜா படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மலையாள படத்தில் நடித்துள்ளார். ஆஷிக் அபு இயக்கியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ரைபிள் கிளப் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் போஸ்டர் அனுராக் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இந்தப் படம் விரைவில் திரைக்கு வருமென படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com