நடிகை அனுஷ்கா இஞ்சு இடிப்பழகி மோகத்தால் மார்க்கெட் இழந்த சோகம்..!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா தற்போது மார்க்கெட்டில் திணறி வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் விவாதிக்கின்றன.
நடிகை அனுஷ்கா இஞ்சு இடிப்பழகி மோகத்தால் மார்க்கெட் இழந்த சோகம்..!
Published on

சென்னை

மாதவன் நடித்த ரெண்டு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அனுஷ்கா. அதன் பிறகு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்தன.தொட்டதெல்லாம் தங்கம். இதனால், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாகி விட்டார். பின்னர் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

இது தவிர, அவர் கதாநாயகியாக நடித்த அருந்ததி, பாகமதி போன்ற படங்களும் வசூலில் முன்னேறி அனுஷ்காவை தனி கதாநாயகியாக உயர்த்தியது. பின்னர், அனுஷ்கா பாகுபலியில் தேவசேனாவாக நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திகைக்க வைத்தார்.

ஆனால் இப்போது அனுஷ்காவுக்குப் போட்டியாக இருந்த திரிஷா, நயன்தாரா போன்ற ஹீரோயின்கள் இன்னும் சளைக்காமல் நடித்துக் கொண்டிருந்தாலும், அனுஷ்காவின் மார்க்கெட்டு மட்டும் சரிந்தது.

அனுஷ்காவின் மார்க்கெட் திடீரென சரிந்ததற்கு முக்கிய காரணம் அவரது உடல் எடை அதிகரிப்புதான். 2015ல் நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். பிரகாஷ் கோவெலமுடி இயக்கிய இந்தப் படத்தில் அவர் உடல் குண்டான வேடத்தில் நடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இதற்காக அனுஷ்கா உடல் பருமனாக மாற முடிவு செய்து, நன்றாக சாப்பிட்டு உடல் எடையை அதிகரித்தார். அந்தப் படத்துக்காக அனுஷ்கா எடுத்த ரிஸ்க்தான் இப்போது அவரது சினிமா வாழ்க்கையில் சரிவைச் சந்திக்கக் காரணம். அதன்பிறகு உடல் எடையை குறைக்க அனுஷ்கா பலமுறை முயற்சித்தும் எதிர்பார்த்தபடி உடல் எடையை குறைக்க முடியாமல் போனது.

சமீபத்தில் ஏ.எல்.விஜய் இயக்கும் ஆக்ஷன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அனுஷ்கா, உடல் எடையை குறைக்க முடியாமல் சிக்கலில் உள்ளதாக கூறப்படுகிறது. இஞ்சி இடுப்பழகி படத்தின் மூலம் அனுஷ்கா மார்க்கெட் இழந்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

35 வயதாகியும் அனுஷ்கா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இதற்கிடையில், இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மனம் திறந்து பேசியுள்ளார்.

சமீபத்தில் புதிய படம் ஒன்றிற்கு அனுஷ்கா ஷெட்டி உடல் எடையை குறித்து உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் சமீபத்தில் வெளியான அவரது புகைப்படங்களை பார்த்து, அனுஷ்கா ஷெட்டி உடல் எடையை குறைத்து விட்டதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு அனுஷ்கா தனது தாயுடன் பெங்களூருவில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கபட்ட அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின. அதில் அனுஷ்கா மிகவும் குண்டாக தெரிகிறார். உடனே நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் வடிவில் டிரோல் செய்ய ஆரம்பித்தனர். அனுஷ்கா ஆன்ட்டி மாதிரி ஆகிவிட்டார். ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறார் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com