கர்ப்பம் குறித்த வதந்தி ; நீங்கள் முட்டாள் ஆகிவிடுவீர்கள் - அனுஷ்கா சர்மா கோபம்

கர்ப்பம் குறித்த வதந்திக்கு நடிகை அனுஷ்கா சர்மா கோபமாக பதில் அளித்து உள்ளார்.
கர்ப்பம் குறித்த வதந்தி ; நீங்கள் முட்டாள் ஆகிவிடுவீர்கள் - அனுஷ்கா சர்மா கோபம்
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியை காதலித்து கடந்த ஆண்டு மணந்தார் அனுஷ்கா சர்மா.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் அனுஷ்கா சர்மா, கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின.

ஒரு நிகழ்ச்சிக்கு வந்த அனுஷ்கா சர்மாவிடம் கர்ப்பம் பற்றிய வதந்தி குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அனுஷ்கா சர்மா,

திருமணத்தை மறைக்க முடியாது ஆனால் கர்ப்பம் அல்ல. நீங்கள் முட்டாள் தனமாக என்ன வேணும்னாலும் எழுதலாம். அது படித்து விட்டு நான் சிரித்து விட்டு சென்று விடுவேன்.

ஆனால் 4 மாதங்களுக்கு பிறகு நீங்கள் பொய்யை பரப்புவது மக்களுக்கு தெரிந்து விடும். அப்போது நீங்கள் முட்டாள் ஆகிவிடுவீர்கள் என்று கோபமாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com