சினிமாவில் 16 ஆண்டுகள் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன அனுஷ்கா

அனுஷ்கா நடிகையாகி 16 ஆண்டுகள் ஆகிறது. ஆரம்பத்தில் யோகா ஆசிரியையாக இருந்தார். 2005-ல் தெலுங்கில் சூப்பர் படத்தில் அறிமுகமானார்.
சினிமாவில் 16 ஆண்டுகள் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன அனுஷ்கா
Published on

அனுஷ்கா நடிகையாகி 16 ஆண்டுகள் ஆகிறது. ஆரம்பத்தில் யோகா ஆசிரியையாக இருந்தார். 2005-ல் தெலுங்கில் சூப்பர் படத்தில் அறிமுகமானார். தமிழில் சிங்கம், என்னை அறிந்தால், லிங்கா, வேட்டைக்காரன், தாண்டவம். இரண்டாம் உலகம், இஞ்சி இடுப்பழகி, தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் திறமையை வெளிப்படுத்தினார். விருதுகளும் பெற்றுள்ளார். 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

அனுஷ்காவுக்கு இப்போது 39 வயது ஆகிறது. இந்த நிலையில் சினிமாவில் 16 ஆண்டுகள் நீடிப்பதற்காக ரசிகர்களுக்கு அனுஷ்கா நன்றி தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இத்தனை ஆண்டுகள் எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி. தங்கள் வாழ்க்கை நேரத்தை எடுத்து எனது வாழ்க்கையில் வித்தியாசங்களை ஏற்படுத்திய அனைவருக்கும் நன்றி. என்மீது அன்பு காட்டுபவர்களுக்கும். அனைத்து படக்குழுவினருக்கும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com