லோகேஷ் கனகராஜின் எல்.சி.யுவில் இணையும் அனுஷ்கா?


AnushkaShetty signed up for Lady Gangsters role in Kaithi2
x

''கைதி 2'' படத்தில் அனுஷ்கா ஷெட்டியின் கதாபாத்திரம் லேடி கேங்ஸ்டராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது

சென்னை,

''கைதி 2'' படத்தில் நடிக்க அனுஷ்கா ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜின் எல்.சி.யுவின் கீழ் உருவாக உள்ள ''கைதி 2'' படத்தில் அனுஷ்கா ஷெட்டியின் கதாபாத்திரம் லேடி கேங்ஸ்டராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது

லோகேஷ் கனஜராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தையடுத்து, லோகேஷ் ''கைதி 2'' படத்தை இயக்க உள்ளார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தில் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்க உள்ளது.


1 More update

Next Story