எந்த ஒரு பயங்கரவாதமும் இழப்பை தான் கொண்டு வரும் - நடிகர் சூர்யா வேதனை

இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்க கூடாது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு பயங்கரவாதமும் இழப்பை தான் கொண்டு வரும் - நடிகர் சூர்யா வேதனை
Published on

சென்னை,

ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22-ம் தேதி பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் சூர்யா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து நடிகர் சூர்யா வேதனையுடன் பேசினார். அதாவது, "எந்த ஒரு பயங்கரவாதமும் இழப்பை தான் கொண்டு வரும். இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்க கூடாது என விரும்புகிறேன். பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக என் பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com