'மஞ்சுமெல் பாய்ஸ்' பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் இருவரும் 'மனோஹரம்' என்ற மலையாளப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
Image Courtesy: X (Twitter)
Image Courtesy: X (Twitter)
Published on

வடக்கஞ்சேரி,

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை அபர்ணா தாஸ். மலையாளத்தில் பகத் பாசில் நடித்து வெளியான ஞான் பிராக்ஷன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அபர்ணா தாஸ் டாடா படத்தில் நாயகியாக நடித்தார். கவின் ஜோடியாக இவர் நடித்த டாடா படத்தை இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கி இருந்தார். இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது.

அவரது அடுத்தப் படம் தமிழில் என்ன என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க, ஸ்வீட் சர்ப்ரைஸாக அவரது திருமண செய்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அது என்னவென்றால், 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தில் நடித்த தீபக் பரம்போல் என்பவரை அபர்ணாதாஸ் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அபர்ணாதாஸ்- தீபக் பரம்போல் இருவரும் 'மனோஹரம்' என்ற மலையாளப் படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி இவர்களது திருமணம் இன்று கேரளா, வடக்கஞ்சேரியில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், அபர்ணா தாஸ் மற்றும் மலையாள நடிகர் தீபக் பரம்போல் ஜோடிக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com