அபர்ணதியின் “வெஞ்சென்ஸ்” படத்தின் டிரெய்லர் வெளியானது

ராகுல் அசோக் இயக்கும் ‘வெஞ்சென்ஸ்’ படத்திற்கு அருண் ராஜ் இசையமைத்துள்ளார்.
அபர்ணதியின் “வெஞ்சென்ஸ்” படத்தின் டிரெய்லர் வெளியானது
Published on

சென்னை,

சின்னத்திரையில் `எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவனம் பெற்றவர் நடிகை அபர்ணதி. இதைத்தொடர்ந்து `தேன்', `ஜெயில்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த இரண்டு படங்களுக்காக பல்வேறு விருதுகளை வென்றார். இதையடுத்து அபர்ணதி `இறுகப்பற்று' படத்தில் கடைசியாக நடிந்திருந்தார். அதில் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

அபர்ணதி தற்போது அறிமுக இயக்குனர் ராகுல் அசோக் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இப்படத்திற்கு 'வெஞ்சென்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏசி புரொடக்சன் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு அருண் ராஜ் இசையமைத்துள்ளார். முக்கிய வேடங்களில் காளி வெங்கட், ஜான் விஜய், இளவரசு, லிவிங்ஸ்டன், ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளனர்.

படம் குறித்து ராகுல் அசோக் கூறுகையில், ‘ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும், அவர் எதிர்கொள்ளும் சவால்களையும் அரசியல் பின்னணியில் இப்படம் பேசுகிறது. அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். தரமான படங்களுக்கு ஆதரவு அளிக்கும் தமிழ் ரசிகர்கள், ‘வெஞ்சென்ஸ்’ படத்துக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும். பல குறும்படங்களை இயக்கியுள்ள நான், இப்போது திரைப்படம் இயக்கியுள்ளேன்’ என்றார்.

இந்த நிலையில், ‘வெஞ்சென்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com