பாராட்டு விழா - ''இசைஞானி'' இளையராஜா மகிழ்ச்சி


Appreciation ceremony - Ilayaraja is happy
x

இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை சிறப்பிக்கும் விதமாக, வரும் 13ம் தேதி பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு சார்பில் வரும் 13ம் தேதி பாராட்டு விழா நடத்தப்படவுள்ளநிலையில், அதற்கு இளையராஜா மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா கடந்த ஜூன் 2ம் தேதியன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடத்தப்பட உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் இசை நிகழ்ச்சி தள்ளிக்கொண்டே சென்றது.

இந்த நிலையில், இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை சிறப்பிக்கும் விதமாக, வரும் 13ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு விழா நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் மூத்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.

இதனையடுத்து, இந்த பாராட்டு விழாவிற்கு இளையராஜா மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒரு கலைஞருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்துவது இதுவே முதன்முறை. உங்களுக்கெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளதோ அதே மகிழ்ச்சி தான் எனக்கும் உள்ளது" என்று கூறினார்.

1 More update

Next Story