நடிகர் சங்க கட்டிடத்தில் விஜயகாந்துக்கு பாராட்டு விழா - நடிகர் விஷால் பேட்டி

நடிகர் சங்க கட்டிடத்தில் விஜயகாந்துக்கு பாராட்டு விழா - நடிகர் விஷால் பேட்டி
Published on

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படம் மார்க் ஆண்டனி. இதில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். ரித்து வர்மா, அபிநயா ஆகியோரும் நடிக்கின்றனர். சென்னையில் நடந்த மார்க் ஆண்டனி பட விழாவில் விஷால் பங்கேற்று பேசும்போது, "ரசிகர்களின் சிரிப்பு, கைதட்டலுக்காகவே சினிமாவில் உழைக்கிறேன். 38 நாட்கள் வலியோடு சண்டை காட்சியில் நடித்தேன். உங்களை பார்க்கும்போது வலி பறந்துபோனது.

நான் பிரமிப்பாக பார்க்கும் பெண் எனது அம்மாதான். எல்லா புதுமுக நடிகர்-நடிகைகளுக்கும் பொறுமை இருக்க வேண்டும். வாய்ப்பு வரும்போது அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நேரம் வரும்போது என் திருமணம் நடக்கும்'' என்றார்.

மேலும் விஷால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "நடிகர் சங்க கட்டிடத்துக்கான பணிகளை முறையாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் அளித்துள்ள பங்களிப்பு அதிகம். நடிகர் சங்க கட்டிட பத்திரத்தை முதலில் மீட்டது அவர்தான். அதற்கு மரியாதை அளிக்கும் விதமாக புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்தில் விஜயகாந்துக்கு பாராட்டு விழா நடத்தப்படும்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com