ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி - ஏசிடிசி நிறுவனம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி தொடர்பாக ஏசிடிசி நிறுவனம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி - ஏசிடிசி நிறுவனம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
Published on

சென்னை,

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி 10-ந்தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிச் சென்று உள்ளே நுழைய முடியாமல் பல ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இந்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீதும் சமூக வலைதளங்களில் சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதனிடையே இந்த இசை நிகழ்ச்சியை நடத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், கானாத்தூர் போலீசார் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி தொடர்பாக சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வரும் ஏசிடிசி நிறுவனம் மீது நம்பிக்கை மோசடி மற்றும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com