ஏ.ஆர். ரகுமானுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
ஏ.ஆர். ரகுமானுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
Published on

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான் இசைப்புயல் என மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார்.

"ரோஜா" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகனாக வலம் வருகிறார் .

இந்த நிலையில் , ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள் , ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் ,

இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com