நடிகை ஹேமமாலினிக்கு 'உஸ்தாத் குலாம் முஸ்தபா கான்' விருது

மறைந்த இசைக் கலைஞா உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் நினைவு நாளையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை ஹேமமாலினிக்கு நினைவு விருது வழங்கப்பட்டது.
நடிகை ஹேமமாலினிக்கு 'உஸ்தாத் குலாம் முஸ்தபா கான்' விருது
Published on

பாரம்பரிய ஹிந்துஸ்தானி இசைக் கலைஞரான உஸ்தாத் குலாம் முஸ்தபா கான், ஆஷா போஸ்லே, ஏ.ஆா. ரகுமான், சோனு நிகம், ஹரிஹரன், ஷான், ஷில்பா ராவ் உள்ளிட்ட இசை பிரபலங்களுக்கு குரு ஆவா. இவரது கலைச்சேவையைப் பாராட்டி பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், சங்கீத நாடக அகாதெமி விருது உள்ளிட்ட உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளன. இவரது நினைவு நாளையொட்டி மும்பையில் 'ஹாஸ்ரி' இசை நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மும்பையின் பாந்த்ராவில் உள்ள 'ஜியோ' பன்னாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை ஹேமமாலினிக்கு 'பத்ம விபூஷன் உஸ்தாத் குலாம் முஸ்தபா கான்' விருது வழங்கப்பட்டது.

இந்திய கலை மற்றும் கலாசாரத்தில் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பை அங்கீகரித்து, ஹேமமாலினிக்கு இசையமைப்பாளா ஏ.ஆா.ரகுமான் இந்த விருதை வழங்கினா. மகாராஷ்டிர மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சா ஆசிஷ் ஷெலா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிரிக்கெட் வீரா சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி டெண்டுல்கா, மகள் சாரா டெண்டுல்கா, இயக்குநா ஹன்சல் மேத்தா, நடிகாகள் ஷரத் கேல்கா, கீத்தி கேல்கா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனா.

விருதளிக்கும் விழாவைத் தொடாந்து, ஏ.ஆா.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரகுமான் பல்வேறு சூபி பாடல்களைப் பாடி, தனது குருவுக்கு மரியாதை செலுத்தினா. 

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com