இசையால் எட்டுத்திக்கும் ஆளும் ஏஆர் ரகுமான்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

ஆஸ்கர் நாயகனுமான ஏ.ஆர் ராகுமான் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சென்னை,
இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும், ஆஸ்கர் நாயகனுமான ஏ.ஆர் ராகுமான் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர், திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
"இசையால் எல்லைகளைக் கடந்து, எட்டுத்திக்கும் ஆளும் அன்பு இளவல் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
உங்களது இசையைப் போலவே நீங்களும் என்றும் இளமையோடும் துள்ளலோடும் திகழ்ந்து, தொடர்ந்து சாதனைகளைப் படைத்திட விழைகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






