70 கோடி பார்வைகளை கடந்த "பீஸ்ட்" படத்தின் "அரபிக் குத்து" பாடல்

விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘அரபிக் குத்து’ பாடல் யூடியூப்பில் 70 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
Published on

சென்னை,

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான 'பீஸ்ட்' திரைப்படம் கடந்த 2022 ஏப்ரல் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. அதிரடி, காமெடி கலந்த இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் சுமார் 236.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதில், அரபிக்குத்து பாடலில் இடம் பெற்ற விஜய்யின் நடனம், காட்சியமைப்பு ஆகியவற்றால் ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பை பெற்றது. அரபிக்குத்து பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார். பாடலை அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி ஆகியோர் பாடி இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது 'அரபிக் குத்து' வீடியோ பாடல் யூடியூபில் 70 கோடி (700 மில்லியன்) பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com