'அரண்மனை 4' திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு

'அரண்மனை 4' உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
'அரண்மனை 4' திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கி வைத்ததில் 'அரண்மனை' படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. கடந்த 2014-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஹன்சிகா, ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக 2016-ல் 'அரண்மனை 2', 2021-ல் 'அரண்மனை 3' படங்கள் வெளியாகின.

இந்த வரிசையில் இந்த படத்தின் 4-வது பாகம் கடந்த மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சுந்தர்.சி இயக்கி, நடித்திருந்த இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார்.

குழந்தைகள் மற்றும் குடும்பங்களை இலக்காக கொண்டு வெளியான 'அரண்மனை 4' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதும் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இந்த நிலையில் 'அரண்மனை 4' திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற 21-ந்தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com