சிம்பு நடிக்கும் 'அரசன்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் 'அரசன்' படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
சிம்பு நடிக்கும் 'அரசன்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
Published on: 

சிம்பு நடிக்கும் 'அரசன்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

கேங்ஸ்டர் கதைக்களம்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் (எஸ்.டி.ஆர்.) நடித்து வரும் திரைப்படம் 'அரசன்'. வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரக்கனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'அரசன்' படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கிளிம்ப்ஸ் வீடியோ

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'அரசன்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் 'பயர்' என்ற கானா பாடல் இடம்பெற்றுள்ளது. சிம்பு கதாபாத்திரத்துக்கு 'தாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'அரசன் வேர்ல்டு' கிளிம்ப்ஸ் வீடியோ விரைவில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

X