பெயர், புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா? - கோர்ட்டை நாடிய விஜய் தேவரகொண்டா

தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெயர், புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா? - கோர்ட்டை நாடிய விஜய் தேவரகொண்டா
Published on: 

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் போலியான விளம்பரங்கள் வாயிலாகவும் அவரது அடையாளம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா தனது பெயர், புகைப்படம் உள்ளிட்ட ஆளுமை அடையாளங்களை அனுமதியின்றிப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஐகோர்ட்டு சம்மன் மற்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அனுமதியின்றிப் பயன்படுத்தப்படும் அடையாளங்கள்

விஜய் தேவரகொண்டாவின் பெயர், புகைப்படம் மற்றும் பிற ஆளுமை அடையாளங்களை அவரது அனுமதியின்றி வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்தி டி-ஷர்ட், கப் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் போலியான விளம்பரங்கள் வாயிலாகவும் அவரது அடையாளம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போலி ஏஜெண்டுகள் குறித்து புகார்

மேலும், விஜய் தேவரகொண்டாவின் மேலாளர்கள் அல்லது முகவர்கள் எனக் கூறி சிலர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவரது தரப்பு கோர்ட்டில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வழக்குகள் நீதிபதி விகாஸ் மகாஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. இதையடுத்து, மனுக்கள் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சம்மன் மற்றும் நோட்டீஸ் அனுப்ப கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நடிகை கங்கனா ரணாவத்தைப் போலவே, நடிகர் விஜய் தேவரகொண்டாவும் தனது பெயர், புகைப்படம் உள்ளிட்ட ஆளுமை அடையாளங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறி, தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com