போதை பழக்கமா? - விமர்சித்த ரசிகருக்கு மாதவன் பதிலடி

போதை பழக்கம் உள்ளதாக விமர்சித்த ரசிகருக்கு நடிகர் மாதவன் பதிலடி கொடுத்துள்ளார்.
போதை பழக்கமா? - விமர்சித்த ரசிகருக்கு மாதவன் பதிலடி
Published on

மாதவன் நடித்த மாறா படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. இதில் ஷரத்தா ஶ்ரீநாத் நாயகியாக வருகிறார். இந்த நிலையில் இந்தி நடிகர் அமித் சாத் மாதவனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தை பலரும் வலைத்தளத்தில் பகிர்ந்தனர்.

அமித் சாத் புகைப்படத்தின் பின்னூட்டத்தில் ரசிகர் ஒருவர் மாதவனை விமர்சித்தார். அவர் வெளியிட்ட பதிவில், மாதவன் ஒரு காலத்தில் எனது மனம் கவர்ந்த நடிகர். ஆனால் இப்போது அவர் தனது சினிமா வாழ்க்கையையும், ஆரோக்கியத்தையும் போதை பழக்கத்தால் அழிப்பதை பார்க்க வருத்தமாக உள்ளது. இந்தி திரையுலகில் அவர் நுழைந்தபோது புதிதாக மலர்ந்த மலர்போல் இருந்தார். இப்போது கண்களையும், முகத்தையும் பாருங்கள். அவை எல்லாவற்றையும் சொல்லும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனை மாதவன் ரசிகர்கள் பலரும் கண்டித்து பதிவுகள் வெளியிட்டனர். அந்த நபரின் கருத்துக்கு பதிலடியாக மாதவன் வெளியிட்டுள்ள பதிவில், ஓ இதையெல்லாம் நீங்கள் கண்டுப்பிடித்து இருக்கிறீர்களா? உங்கள் பெற்றோரை நினைக்கும்போது எனக்கு கவலையாக இருக்கிறது. நீங்கள் மருத்துவரை அவசியம் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com