"நீங்க என்ன ரஜினியா, அஜித்தா, விஜய்யா..." - நாஞ்சில் விஜயனுக்கு திருநங்கை கேள்வி

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடியனாக பங்கேற்று பிரபலம் ஆனவர் நாஞ்சில் விஜயன்.
சென்னை,
நடிகர் நாஞ்சில் விஜயன் கூறிய கருத்துக்கு திருநங்கை வைஷ்ணவி புதிய வீடியோ வெளியிட்டு பதிலளித்துள்ளார். தாம் பப்ளிசிட்டிக்காக இதைச் செய்து கொண்டு இருக்கிறேன் என்று கூறுகிறார்கள். நாஞ்சில் விஜயன் என்ன ரஜினியா? கமலா? அஜித்தா? விஜயா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தன்னை தெரியாது என்று கூறும் நாஞ்சில் விஜயனுக்கு தன்னுடைய வீடு முதல் மாடியில் இருப்பது எப்படி தெரியும் என்றும் வைஷ்ணவி கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடியனாக பங்கேற்று பிரபலம் ஆனவர் நாஞ்சில் விஜயன். இவர், 2023ம் ஆண்டு மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதற்கிடையில், நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக திருநங்கை வைஷு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களிலும், செய்தியிலும் பேசும் பொருளாக மாறியுள்ளது.






